Saturday, March 31, 2012

வரம் வேண்டும்..

இசைமீட்டும் குயிலோடு 
தலையாட்டும் மரமெல்லாம் 
தருவிக்கும் இளங்காற்றில் 
தன்மான தமிழ் வேண்டும் 

பாடுபட்டுப்பெற்றுடுத்து 
பசிநீக்க பாலூட்டி 
துயில் துறந்து உயிர் காத்த தாயை 
நீங்காத நிலை வேண்டும் ..

மனதுக்கு இதமான 
மகிழ்ச்சிக்கு உரமூட்டும் 
பேரின்பம் தரவல்ல 
மழலை மொழி வேண்டும்..

காவியங்கள் தலைகுனியும் 
கவிதைகள் வரைவதற்கு 
நினைவுகளின் இருப்பிடமாய் 
காதலிக்கும் நெஞ்சம் வேண்டும்

சோதனைகள் சீண்டும் போது
போதனைகள் பொழிந்துகொண்டு 
சாதனைக்கு தோள்கொடுக்கும் 
நம்பிக்கையாய் நண்பன் வேண்டும்..

குடல் வேகும் பட்டினியை 
குழந்தைகள் உணராத 
தாராள உணவுள்ள 
தாய் மண்ணில் நான் வேண்டும்...

வார்த்தையிலே நஞ்சூட்டும் 
ஆறறிவு வானரங்கள் 
காட்டுயானை காலடியில் 
கசங்கிப்போய் கிடக்கட்டும்..

விருந்தாளிக்கு நெல்லரிசி 
விதைத்தவனுக்கு வாய்கரிசி 
வரையறுத்த தலைவனை 
தகர்த்தெறியும் பலம் வேண்டும்..

பொழுது சாயும் வேளைகளில் 
பொழுதுபோக்க நடக்கும் போது
புழுதி பறக்காத வீதி வேண்டும்..

நான் வாழ வரம் வேண்டும்..
அந்த வரங்களும் வாழவேண்டும்..


1 comment:

  1. Superb anna. Every line is rocking!! As usual, my fav stanzas are:


    காவியங்கள் தலைகுனியும்
    கவிதைகள் வரைவதற்கு
    நினைவுகளின் இருப்பிடமாய்
    காதலிக்கும் நெஞ்சம் வேண்டும்

    and

    வார்த்தையிலே நஞ்சூட்டும்
    ஆறறிவு வானரங்கள்
    காட்டுயானை காலடியில்
    கசங்கிப்போய் கிடக்கட்டும்..

    ReplyDelete

PhotobucketPhotobucket
Photobucket