Thursday, December 22, 2011

தேடல்

சீவிச்சிங்காரிச்சு 
சிறுவட்டப் பொட்டுவைச்சு
கட்டழகன் வருவானென 
கனவொன்று கானுறியோ..

காலையில் வாசல் கூட்டி
மாக்கோலம் நீபோட்டு
கண்ணாலே தேடுறியே 
கண்ணாளன் வரலையா?

கல்லூரி வாசலிலே 
பலநூறு முகங்களிலே 
சலிக்காமல் தேடுறியே 
சிறகோடு வந்தானா?

பட்டாடை நீ பூண்டு 
கொத்தோடு பூக்கொண்டு 
கோயிலுக்குள் தேடுறியே 
பூப்போட்டு கும்பிடவா?


மழை வந்து தீண்டும் போது
குடை கொண்டு வருவானென்றா
திசையெல்லாம் திரும்புகிறாய் 
குடைதந்து சென்றானா?

கடலையுடன் கடற்கரையில் 
காதலர்கள் இருக்கையிலே 
நாற்புறமும் தலை திரும்புதே 
தனியாய் அவன் இருப்பானென்றா?

இருள் வந்து சூழ்ந்த பின்னே 
மின்விளக்கை ஒளிரச்செய்து 
எட்டி எட்டி பாக்கிறியே 
எட்ட அவன் வந்தானா?

பிறை நுதல் முகம் பார்த்து 
மனதுக்குள் முகம் வரைந்து 
சலனமின்றி தூங்குகையில் 
கனவாக வந்தானா?

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket