Wednesday, December 21, 2011

அவள்

சலனமின்றி சிரிக்கும் நிலவு 
அள்ளி அணைக்க துடிக்கும் இரவு 
அவளின் நினைவை புசிக்கும் பொழுது 
எனக்குள் புதிதாய் இன்ப உணர்வு.. 

சோலையிலே சிரிக்கும் மலர்கள் 
சாலையோரம் பறக்கும் பறவை 
காதோரம் கவிபாடும் தென்றல் 
அவள் வந்தால் கொஞ்சம் வெட்கும்.

படித்த நாளிதழ் பழைய பேப்பர் ஆயாச்சு 
எடுத்த நிழல் படம் தெளிவற்றுப்போயாச்சு 
படித்த நண்பர்கள் பட்டணம் சென்றாச்சு 
அவள் நினைவுகள் நெஞ்சோடு தங்கிச்சு..

தட்டிலே போட்ட தோசை 
வட்டமாய் இருக்கையிலே 
பற்றி வாயில் திணிக்கையிலே
தட்டின் மேல் அவளின் முகம்.


தொட்டு நான் பார்த்தபோது 
சுட்ட தோசை தந்த சூடு 
பட்டு என் கைவிரல் சுட்ட போதே 
கலைந்த கனவு..

வட்டநிறப்பொட்டு வைச்சு 
மல்லிப்பூ கொண்டை கட்டி 
தோளின் மேலே சாய்ந்து கொண்டு 
ஊர்கோலம் வந்தவளே..

கடல் கடந்து நான் வந்தாலும் 
பிரிந்தது உடல்களே 
பிரியாது அவள் நினைவுகள் 
அழியாது அவள் மேல் கொண்ட காதல்..

1 comment:

  1. Nice poem anna. The girl in that poem is very lucky :)

    ReplyDelete

PhotobucketPhotobucket
Photobucket