Monday, December 19, 2011

விடுதலை

வீட்டுக்காவலில் தவிக்கும் அவள் 
கூந்தலில் தாவிச்சென்று 
ஊர்கோலம் போவதற்கு ஏங்கும்
முள்ளின் காவலில் மலர்ந்த ரோஜா..

சிறகிருந்தும் பறக்கவே 
தெரிந்திடாமல் விழித்திடும் 
வேடன்கையில் சிக்குண்ட 
கூண்டுக்கிளி..

தோகைவிரித்து ஆடிடாமல் 
கட்டிவைத்து அழகு பார்க்கும் 
கான மயில் 

மண் கிழித்து வெளியே வந்தால் 
கல்லொன்று படுத்துக்கிடக்கும் 
தோட்டத்தில் 
தெரியாமல் விழுந்த விதை 

நார்ப்பதைத்தாண்டிவிட்டால்
பசிக்கு திறந்து ருசிக்கு மூடும் 
வினோதமான பூட்டுப்போட்டு 
நாவினைப்பூட்டி வைக்கும் வாய்
 

பேனை கொண்டொருவன் 
முழங்கிட்டால்
சேனைகொண்டு அடக்கிவிடும் 
படைகொண்ட நாட்டில் 
செயல் இழந்த விரல்கள்..

இளமையில் திறமையும் 
சொல்லிலே வலிமையும் 
சொல்லனா துயரமும் 
கொண்ட இலைமறை காய்கள்

காலத்தால் பழமையும் 
வீரத்தால் பெருமையும் 
மொழியிலே ஆயுதமும் கொண்டு 
சிங்களவர் கைகளில் 
சிறைபட்ட தமிழ்..

கையூட்டுப்பெற்ற அதிகாரியின் 
கையில் விலங்கு போட்ட 
அதிகாரி தடுப்ப்க்காவலில் 

விடுதலை என்பது 
வெள்ளைக்காரன் கொடுத்ததல்ல 
இன்னும் விடுபடாமல் கிடக்கிறது 
ஒவ்வோர் மனிதனிலும்...

1 comment:

  1. பேனை கொண்டொருவன்
    முழங்கிட்டால்
    சேனைகொண்டு அடக்கிவிடும்
    படைகொண்ட நாட்டில்
    செயல் இழந்த விரல்கள்..

    NIce lines anna.

    ReplyDelete

PhotobucketPhotobucket
Photobucket