Wednesday, December 14, 2011

ஒப்பனை

இயற்கைக்கும் செயற்கைக்கும் 
இடையில் ஒரு போராட்டம் 
வயதுக்கும் பொலிவுக்கும் 
நடுவில் ஒரு நல்வரவு 

வீதி வரும் கிளிகளிலே 
இல்லை பஞ்ச வர்ணம் 
ஆனால் அவர் முகங்களிலோ 
காணமுடியும் பலவர்ணம் 

காறி உமிழ்ந்த பாக்கு நீர்போல் 
சிரம்மேல் சிறு குட்டை 
எண்ணெய் வைத்து தோயாமல் 
சேவல் போலே ஒரு கொண்டை

நள்ளிரவில் மனைவியை 
பார்த்து அலறும் கணவன் 
காரணம் அவள் முகத்தில் 
மோகினியில் உருவம் 


கணவனுக்கு மரக்கறியும் 
தன் அழகை மெருகேற்ற 
துட்டுக்கு முட்டையும் வாங்கும் 
பெட்டைக்கோழி..

உதட்டில் ருசி இல்லை என்றா?
உமிழ்ந்து கொள்ள பூச்சுக்கள் 
பச்சைத்தமிழன் என்றுரைக்கவா
உடம்பினில் பச்சை குத்துக்கள்..

தானாய் வந்த மொட்டையை மறைக்க 
தேடி வாங்கிய தலைமுடி சட்டை 
காற்று வந்து துகிலுரிந்தால்
எங்ஙனம் மறைப்பார் அவர் சொட்டை? 

ரகசியம் மறைக்க பெண்கள் 
மூடும் ஒரு அதிசய திரை
திரைமரைவின் ரகசியம் 
திடீரென மழை வந்தால் அம்பலம் 

சாமிகளை தரிசிக்க செல்லும் 
மாமிகளும் சாயம் பூசி 
கற்பூர வாசனையை மிஞ்சும்
அவர் தெளித்த வாசனைத்தைலம்...

அழகுக்கு அழகு சேர்க்கும் 
கிழவி தந்த வழிமுறைகள் 
ரசாயன பூச்சுக்கள் 
சேர்த்து வைக்கும் வடுக்கள் பல 

இளமையை செப்பனிடும் 
ஒப்பனைகள் பின்னாளில் 
தெளிவான முகங்களை 
கசங்கிகிடக்க வைக்கும்

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket