Saturday, December 10, 2011

கவிஞன் என்பவன்

கவிச்சோலை மலர்வதற்காய் 
சிந்தனையில் உரம் போட்டு 
உயிர்பிழிந்து தண்ணீர் ஊற்றுவான்..

சொல்லேனும் பூவெடுத்து 
வார்த்தைகளை நாராக்கி 
கவிதை எனும் சரம் தொடுப்பான் 

ஐம்பூதங்களையும் 
ஆயிரம் பொய் சொல்லி 
அழகுத்தமிழில் எடுத்துரைப்பான் 

ஐம்புலனும் அழகுபெற 
உயிர் மெய் எழுத்துக்களைத்தழுவி 
உவமை எனும் ஊற்றெடுப்பான் 

நீல மைவேண்டி 
வானத்தின் எல்லைகளை 
தேடுவதற்கு முகில் குடைவான் ..


நாடு விட்டு நாடுதாண்டும் 
பாலங்களை வரியில் சொல்லி 
உள்ளங்கையில் உலகம் தருவான் ..

இயற்கையை காதலிப்பான் 
இயற்கையின் வனப்புகளில் 
கவிதையின் விம்பம் காண்பான்..

மனமுருக்கும் கவிதை சொல்லி 
தவழ்து வந்த அலை போல் சனத்தை 
திரண்டு வரும் சுனாமியாக்குவான்...

பிறைபோல மூளை தேய்ந்து 
ரத்தக்கம்பளம் விரிப்பான்
செந்தமிழ் நடந்துவர..

கவிதை எனும் பந்தம் ஏத்தி
தமிழுக்கு ஒளி கொடுப்பான் 
தடம் மாறி போக விடாமல்..

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket