Thursday, December 1, 2011

மதவெறி

இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடையிலே 
இறைவன் கொடுத்த இடைவேளையில் 
இளைப்பாறாமல் வெறி பிடித்து அலையும் 
சில ஆறறிவு ஜீவன்களின் ஆணவம்..

செல்லும் வழி வேறாகினும் சேரும் 
இடம் ஒன்றுதான் என எண்ண மறுக்கும் 
சில மூடர்களின் அறியாமையின் 
மூலதனம் தானோ மதவெறி ..


அமைதியின் உருவமான இறைவனை 
அடக்கு முறைக்குள் இழுத்து செல்லும் 
வெறி பிடித்த சில மனிதாகளின் 
போராயுதம் தானோ மதம்? 

வலிகள் நிறைந்த வாழ்கையின் 
வழிகாட்டி தான் மதம் என்றால்? 
அந்த மதத்தை வைத்து 
எதற்கு மனதிற்குள் ரணம்? 

பல கதவு கொண்ட வீடு தான் கடவுள் என்றால் 
அதை அடையும் வழிகள் தானே மதங்கள்
அந்த வழிகளிலே சிலருக்கு பிடிக்கும் மதம் 
மதம் பிடித்த யானையும் வெட்கும்...


1 comment:

PhotobucketPhotobucket
Photobucket