Monday, November 28, 2011

வண்டிச்சக்கரங்கள்

கால நீரோடையில் கசங்கிப்போய்
கிடக்கிறது வாழ்கையின் இலட்சியவெறி
தட்டி கொடுப்பவரும் துட்டுக்கு
கைநீட்டும் சீர்கெட்ட உலகம் இது

ஓட்டை விழுந்த பானையாய்
உடலை விட்டு உயிர் கசியுது
துடுப்பிழந்த ஓடம் போலே
கரை சேர ஏங்குது ......


பொறியில் சிக்கிய எலியாக
நெரிகிறது என் கழுத்து
நொறுங்கிய கண்ணாடி வளையலாய்
சிதறியது இள மனசு...

வாழ்க்கை எனும் வண்டிச்சக்கரத்தில்
அச்சாணியாய் அகப்பட்டேன் நான்
சக்கரம் சுழல்கிறது சரியாக
அச்சாணி நெரிகிறது அசையாமல்...

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket