Thursday, November 24, 2011

கார்த்திகை மலர்கள்

கல்லறையில் துயில் கொள்ளும் மாவீரரே,
நீங்கள் கண்திறக்கும் மாதம் இந்த கார்த்திகை தானே
செந்தமிழன் வாழவென சிலை ஆனிரோ?
இங்கு வன்கொடுமை தீரவேண்டி படை சேர்ந்தீரே..!!!

எழுத்தில் மட்டும் ஆயுதம் இல்லை கழுத்திலும் தானே
களத்தினில் உங்கள் வீரம் எழுத்தினில் கண்டோம்
நீங்கள் நடந்து வந்த பாதை எல்லாம் கார்த்திகை மலர்கள்
உங்கள் பாதம் தொட்டு ஆசிபெற கார்த்திகையில் பூக்கும் .

கருப்பினை காதலித்த கதை சொல்லுங்கள்
போர்களமே வாழ்க்கை ஆன விதி பாருங்கள்
கழுத்தினில் நஞ்சு குப்பி கடல் அலையிலும் உங்கள் சக்தி
தமிழினில் உங்கள் பக்தி அழித்தீர் பகையை சுத்தி..

உரிமைக்காக உயிரைத்தந்த தெய்வம் நீங்களே,
உடமைகளை இழந்த போதும் துவழவில்லையே
வறுமை வந்து வாட்டினாலும் மரிக்கவில்லையே
பகை வந்து சூழ்ந்த போதும் பணியவில்லையே ...

தாவிவந்த படைகள் எல்லாம் தடுமாறின
ஏவி விட்டோர் தலைகளுக்கு வலி தந்தீரே
அவர் திட்டமெல்லாம் உங்கள் கையில் சிதறுண்டதே
அவர் கொண்டு வந்த ஆயுதமும் இரையானதே..

கல்லறையில் கண்ணுறங்கும் காவியங்களே
கண்களுக்கு ஒளி தந்த மதி நீங்களே
விதியை வென்று விட்ட  மாவீரரே
காட்டிக்கொடுத்த கயவர்களால் துயில் இடமும் போனதே

கார்த்திகை மாதம் என்றால் புனிதமானதே
பனித்துளியும் இறங்கி வந்து கல்லறை நனைக்குமே..
தலைவன் பிறந்த நாளை தொட்டு உங்கள் புனித நாளுமே
கார்த்திகை விளக்கீட்டின் தீப ஒளி நீங்களே ..

கண்ணிரண்டில் நீர் சொரிய கதறுகிறோம் இங்கே
உங்கள் செங்குருதி காயவில்லை எங்கள் நெஞ்சிலே
மரணத்தை வெற்றிகொண்ட உங்கள் நினைவிலே
வாடுகிறோம் நாங்கள் இங்கே அகதிகளாக ..

கண்திறந்து வாருங்கள் நம்மினம் மீட்க
ஓயாத அலையாக அடியடிப்போம் எதிரிகள் ஓட
என்று கதறுகிறோம் நாங்கள் இங்கு உம் நினைவாலே ...
உங்கள் ஆத்மா சந்தியாகும் சொர்க்க வாசலிலே..!!!

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket