Thursday, November 17, 2011

காதலெனும் கல்லறையில்..!!!

இலையில் நரம்பு போல் 
இணைந்தே வாழ்வோம்
இரு மனம் இல்லை ஒரு மனம்
என்றாய் நமக்கு பிரிவென்றால்
அது நம் மரணத்தில் தான் என்றாய்


உன்னுடன் பழகிய அந்த நாட்கள்
என்னை நான் மறந்த அந்த பொற்காலம் 
என்னை நீ மறந்த நிகழ்காலம் 
இப்போது என்னை கொல்லும் அந்த இறந்த காலம் 
என்னவாகுமோ என் எதிர் காலம்???

காத்திருந்தால் காதலில் சுகமாம் 
எதிர் பார்த்திருந்தால் வருஷமும் நிமிஷமாம்
காத்திருந்தேன் எதிர்பாத்திருந்தேன் 
காலம் தான் கழிந்தது
காதலும் கலைந்தது.

கனவுகள் பல கண்டேன்
என்னையே நான் மறந்தேன் 
தனிமையில் சிரித்தேன்
தூக்கத்தை தொலைத்தேன்
துறவியாய் அலைந்தேன்
தூக்கிஎறிந்து விட்டாய்

புன்னகையில் பூக்கள் கண்டேன் 
பூக்களிலே உன்னை கண்டேன்
பூவாசம் நானறிந்தேன் 
பூவே உனக்காக வண்டு போலே
மாறிவிட்டேன் ஆனால் நீ மட்டும்
பூச்சரமிட்டாய் நம் காதலுக்கு.

மாறாத நினைவாய் நெஞ்சில் வந்தாய் 
கண் மூடிய கணமெல்லாம் கனவானாய்
கனவிலும் காதல் தந்தாய்
பாசமென நான் இருந்தேன் 
பகல் வேஷம் ஆக்கி நீ சென்றாய்
தேவதை என நான் நினைத்தேன்
தேவதாஸ் ஆவேன் என நினைக்கவில்லை.

பிரிந்து சென்றவள் திரும்பி வந்தாய்
என் கல்யாணம் வந்து விடு என்றாய்
ஆயிரம் இடி என் தலை மேல்
விழுந்ததை போல்
நம் காதலை வெளிப்படுத்தின 
என் கண்ணோரமாய் கண்ணீர் துளிகள்
நடை பிணமாய் வாழ்கிறேன் 
காதலெனும் கல்லறையில்..

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket